தற்போதைய செய்திகள்

குமாரபாளையம் நகர்மன்றத் தேர்தல்: திமுக வேட்பாளரை எதிர்த்த சுயேச்சை வேட்பாளர் வெற்றி

DIN

குமாரபாளையம்: குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு எதிராக, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு, திமுக 14 இடங்களையும், அதிமுக 10 இடங்களையும் பிடித்தது. திமுக, அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் சுயேட்சைகளாக களமிறங்கி 9 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இங்கு, தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை. திமுக, அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நகர்மன்றத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட சத்தியசீலன், சுயேச்சையாக வெற்றி பெற்ற டி.விஜயகண்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டு, மறைமுகத் தேர்தலில் நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளரான டி.விஜயகண்ணன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலை முன்னிட்டு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT