தற்போதைய செய்திகள்

தில்லி: அரசு பள்ளியில் நீச்சல் குளங்களை துணை முதல்வர் திறந்து வைத்தார்

DIN

புதுதில்லி: தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு நீச்சல் குளங்களை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். 

இந்தப் பள்ளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவது முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முடிவு என்று துணை முதல்வர் கூறினார். எனவே, எதிர்காலத்திலும் நீச்சல் குளங்களை உருவாக்க விரும்புவதாக கூறினார்.

ஏப்ரல் 1 முதல் நீச்சல் குளம் முழுமையாக செயல்படும் என்றும், அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் திறக்கப்படும் என்றும் சிசோடியா கூறினார்.

அருகிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் இங்கு நீச்சல் கற்றுக் கொள்ளலாம். பயிற்சியாளர்களின் கீழ் அவர்கள் தொழில்ரீதியாகப் பயிற்சி பெறலாம் என்று துணை முதல்வர் கூறினார்.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக நீச்சல் குளங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த திறப்பு விழா அப்பகுதியில் வரவிருக்கும் பல நீச்சல் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT