தற்போதைய செய்திகள்

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலில் உலக நன்மை வேண்டியும், நாடு நலம் பெறவும் அனைத்து மக்களுக்கும் எல்லா வகையான செல்வங்களும் கிடைக்க வேண்டியும் ஆனந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து அம்மனுக்குரிய திருநாமங்கள் சொல்லி பூஜைகள் செய்தனர். அப்போது கோயில் மண்டபத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் திருவிளக்கு பூஜை வழிபாட்டின் நன்மை குறித்து சிவாச்சாரியார் பரத்வராஜ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். 

திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது கோயில் மண்டபத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள் பாலித்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்.

திருவிளக்கு பூஜை வழிபாட்டின் நிறைவாக மங்களராத்தி  நடைபெற்று அதன்பின் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலுக்கு வந்து இந்த  திருவிளக்கு பூஜையைக் கண்டு அம்மனை தரிசித்தனர். கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மானாமதுரை பகுதி பெண் பக்தர்கள் கூடி செய்திருந்தனர். திருவிளக்கு வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் இரவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT