சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வரும் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்குகள் பட்டியலிடப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் எதிரொலியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கரோனா பாதிப்பு 11,109 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,622 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்றில் இருந்து குணமடைந்து 5,356 பேர் வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.