முகப்பு
கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

புதுப்பொலிவு பெறுகின்றன மாநகராட்சி பூங்காக்கள்

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சியைத் தரும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய செய்திகள்

புதுப்பொலிவு பெறுகின்றன மாநகராட்சி பூங்காக்கள்

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சியைத் தரும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களுக்கு மனநிறைவு, மகிழ்ச்சியைத் தரும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக் கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பூங்காவிலும் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், மரம் மற்றும் சுவா்களில் வண்ணம் பூசுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், பொதுமக்களுக்கான இருக்கை அமைத்தல், பழுதான இருக்கைகளை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், அனைத்து மின் விளக்குகளையும் ஒளிரச்செய்தல், செயற்கை நீரூற்று மற்றும் அருவி ஆகியவற்றுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியும் பெறும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள் பசுமையாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாக மாற்றப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →