தற்போதைய செய்திகள்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் இடம் பெறுவதில் சிக்கல்!

 நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாமல் களம் காணப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாமல் களம் காணப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, மூன்றாவது போட்டியில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் களம் கண்டார். அதன் பின், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 15) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் அவர் விளையாட  மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்த சூழலில் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

இது குறித்து மும்பை இந்தியன் அணியின் வீரர் டிம் டேவிட் பேசியதாவது: தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவக் குழுவின் ஆலோசனையில் நான் அங்கம் வகிக்கவில்லை. மருத்துவக் குழு கூறியவுடன் ஆர்ச்சர் அணியில் இடம்பெறுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஷான் சதம்; 5 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஷ்தீப்.. 4 -1 என தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக டி20 தொடரை வென்று பாகிஸ்தான் அபாரம்!

சென்னையில் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT