கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 500-ஐ தாண்டியுள்ளது
தமிழ்நாட்டில் நேற்று (ஏப்.15) 502 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.