தற்போதைய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது: மம்தா பானர்ஜி

உத்தர பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

DIN

உத்தர பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அட்டிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷரஃப் அகமது ஆகியோர் பொது வெளியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி பேசியதாவது: குற்றவாளிகள் தங்களது கைகளில் சட்டத்தினை எடுத்துக் கொள்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு வெட்கக் கேடான செயலாகும். நான் இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். உத்தர பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டும் தனது அதிர்ச்சியை மம்தா பானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT