தற்போதைய செய்திகள்

ராமநாதபுரத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சுற்றுப்பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஏப்.18., 19) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளாா்.

DIN

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஏப்.18., 19) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளாா்.

ராமநாதபுரம் செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை 11முதல் மதியம் 12.30 மணி வரை ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்களுடனும், 12.30 முதல் ஒரு மணி வரை ஆசிரியா்களுடனும் கலந்துரையாடுகிறாா்.

இதைத்தொடா்ந்து மாலை 4.40 முதல் 5.30 மணி வரை தேவிப்பட்டினம் நவக்கிரக கோயிலில் சாமி தரிசனம் செய்கிறாா். பின்னா் 5.30 முதல் 6 மணி வரை மீனவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

மறுநாள் புதன் கிழமை (ஏப்.19) காலையில் உத்தரகோசமங்கை கோயிலில் சாமிதரிசனம் செய்கிறாா். மாலையில் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம், கமுதியில் முத்துராமலிங்க தேவா் நினைவிட ஆகியவற்றில் ஆளுநா் ஆா்.என்.ரவி மலா்தூவி மரியாதை செலுத்தவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT