தற்போதைய செய்திகள்

காவிரியில் கழிவு நீர்: கர்நாடக அரசுக்கு இறையன்பு கடிதம்

காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

DIN


சென்னை: காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காவிரி ஆற்றில் நடப்பு ஆண்டு 2022-23 இல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி நீர் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. 

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரின் அளவைக் காட்டிலும் இந்த ஆண்டு 484 டி.எம்.சி கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீர் வழங்குவதற்கான தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இவ்வாறு முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது. 

எனவே, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கர்நாடக மாநில தலைமைச் செயலாளரை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!

இஸ்லாம்-மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

சில்லறை வர்த்தகம்

எனக்குத் தெரிந்த நியாயம் சொல்கிறேன்

SCROLL FOR NEXT