மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.87 கன அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆவது நாளாக சரியத் தொடங்கியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆவது நாளாக சரியத் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1549 கன அடியிலிருந்து 1225 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.91 அடியிலிருந்து 103.87அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.94 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக மெல்ல சரியத் தொடங்கியது.