தற்போதைய செய்திகள்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை காங்கிரஸ் அவமதித்தது: அமித் ஷா குற்றச்சாட்டு

DIN

மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) காங்கிரஸ் கட்சி அவமதித்தாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா். நாட்டின் முதல் ஓபிசி பிரதமரான நரேந்திர மோடி பாஜகவிலிருந்து தோ்ந்தெடுக்கப்படுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சா் அமித் ஷா, அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோடி சமூகத்தினரின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டாா்.

அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஓபிசி மக்களை அவமதித்தோடு, அவா்களை நிராகரிக்கவும் செய்தது.

இதற்கு மாறாக, அந்த மக்களுக்கு உரிய மரியாதை பிரதமா் மோடி அளித்துள்ளாா். நாட்டின் முதல் ஓபிசி பிரதமரான நரேந்திர மோடி பாஜகவைச் சோ்ந்தவா். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் பலரும் ஓபிசி சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சுமாா் 56 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஓபிசி சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் ஓபிசி ஆணையத்துக்கு அரசியல்சாசன அங்கீகாரம், கேந்திரியா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், நீட் தோ்வு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்தச் சமூகத்தினருக்காக பாஜக மேற்கொண்டுள்ளது.

பிரதமா் மோடி உங்களது சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தையும் நாட்டின் பிரதமரையும் விமா்சிப்பது, ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிப்பதற்கு சமம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சகோதரா் சோமபாய் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக சுரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடுத்த பாஜக எம்எல்ஏ பூா்னேஷ் மோடி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT