மணமகளே வா என்ற புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியத்துவம் பெறா (non prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
டிஆர்பியிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து முதன்மையான இடத்தைப் பிடித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை சித்தாரா நடிக்கும் பிரதான தொடரான பூவா தலையா தொடர் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது. இத்தொடர் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் முடிகிறது.
இதனிடையே, திருமகள் தொடரில் நாயகியாக நடித்த ஹரிகா சாது நடிக்கும் இந்த புதிய தொடர் வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
ஹரிகா சாது, சுந்தரி தொடரில் நடித்துவரும் அரவிஷ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர் திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.
இந்த தொடர் பூவா தலையா தொடருக்கு மாற்றாக பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், மணமகளே வா தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.