நிர்மலா சீதாராமன் ANI
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா நிர்மலா சீதாராமன்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியிலிருந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியிலிருந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல்வேறு கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

புதுச்சேரியில் ஏற்கெனவே பாஜக போட்டியிடும் என முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இதற்கு மத்தியில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வருகை தந்திருந்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த பிரகலாத் ஜோஷி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியிலிருந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பரிந்துரை பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அவர் புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக சார்பில் 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT