2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தவெக தலைவர் விஜய் அவர்கள், விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்விவிருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
2-ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் கல்விவிருது விழாவினை, ’தனது பிறந்தநாளுக்குள்ளாக (ஜூன் 22) நிகழ்த்தவேண்டும்’ என கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார், தலைவர் விஜய். ஏனெனில், தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகளைத் தொடங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2022 - 23ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா, சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்களும் பெற்றோர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.