தற்போதைய செய்திகள்

வெம்பக்கோட்டை: நாளை முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

DIN

விருதுநகர்: விருதுநகரிலுள்ள ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளதாக அறிவித்துள்ளனர். சிறு பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 150 பட்டாசு ஆலைகளை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த வருடத்தில் மட்டுமே பட்டாசு ஆலைகளில் நடந்த விபத்துகளினால் பலர் பலியாகியுள்ளனர்.

சில பட்டாசு ஆலைகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக ரசாயன மூலப்பொருள்களை இருப்பு வைத்திருப்பதுடன், அதிகமான தொழிலாளா்களைக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும், அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்காமல், மரத்தடியிலும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது போன்ற பல்வேறு விதிமீறல்கள் காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது.

பட்டாசு ஆலைகளில் உள்ள அறைகளை உள்வாடகை, குத்தகைக்கு விடுவோர், கூடுதலாக மூலப்பொருள்களை இருப்பு வைத்திருப்போர், விதிமீறி பட்டாசுகள் தயாரிப்பவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபடும் ஆலைகளை கண்டறிய நான்கு சிறப்பு நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளை முழுமையாக ஆய்வு செய்து, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் ஆலைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனா். இதன்படி, அந்த ஆலைகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT