யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

இது ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்: யோகி ஆதித்யநாத்!

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ”தில்லியை ஆட்சி செய்யப்போவது ஒரு ராமபக்தர் தான்” என்று கூறியுள்ளார்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் ”தில்லியை ஆட்சி செய்யப்போவது ஒரு ராமபக்தர் தான்” என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத், ”2024 மக்களவைத் தேர்தல் ராமரின் பக்தர்களுக்கும், துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல்; தில்லியை ஒரு ராமபக்தர் மட்டுமே ஆட்சி செய்வார். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் குணாதிசயம் ராமருக்கு எதிரானது. வீர் பகதூர் சிங் ராமரின் பக்தர் என்பதால், காங்கிரஸ் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது: ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கக் கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது. சமாஜ்வாதி கட்சியும் ராமர் கோயில் சரியாக கட்டப்படவில்லை என்று கூறுகிறது. ராமர் கோயில் இந்தியாவின் நம்பிக்கையின் அடையாளமாகும். எனவே, இந்தத் தேர்தல் ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தலாக அமைந்துள்ளது" என்று கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பிரசாரத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரின் கோயில்களில் தரிசனம் செய்துவருகிறார். இன்று (மே 29) கோரக்பூர் கோயிலுக்கு சென்ற யோகி ஆதித்யநாத் குழந்தைகளை சந்தித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டதுடன், அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT