FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் மரியாதைச் செலுத்தியதைப் பற்றி...

Updated On : 22 ஏப்ரல் 2025, 6:16 pm IST
ஜப்பானின் ஹிரோஷிமாவிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். - எக்ஸ்
பகிர்:

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மரியாதை செலுத்தினார்.

தொழில் சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகரத்திலுள்ள ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவிற்குச் சென்று பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கும், அணு குண்டு வீசப்பட்டத்தில் பலியானவர்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

Advertisement

மேலும், அந்தப் பூங்காவில் 1945-ம் ஆண்டு குண்டு விழுந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுகுண்டு குவிமாடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டதாக தெலங்கானா முதல்வரின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு மற்றும் அம்மாநில அதிகாரிகளும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments