கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 15 நாள்களாக தனியார் கல்லூரி நடத்தி வந்த கோடைக்கால வகுப்பில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த ஜலந்தராவின் அறைக்கு அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த மற்றொரு மாணவர் ஜலந்தரா மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், உடனடியாக கல்லூரி அதிகாரிகளுக்கு அந்த மாணவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜலந்தரா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த ஜலந்தராவுக்கும் அந்த கோடைக்கால வகுப்பின் மாணவர் தலைவரான மற்றொரு சிறுவனுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது கண்டறியப்பட்டது.

கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு அந்த மாணவர் தலைவரும் ஜலந்தராவுடன் பகையை வளர்த்து வந்த மற்ற 2 மாணவர்களுடன் இணைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மோதல் தீவிரமடைந்ததால் ஜலந்தராவை போர்வையால் மூடி அவரது முகத்தில் துணியை வைத்து மூச்சடைத்து கொலை செய்துள்ளனர்.

இதனால், கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இன்று ஜார்சுகுடா மாவட்டத்திலுள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

SCROLL FOR NEXT