மகாராஷ்டிர கல்லூரியில் மாணவர் குத்திக் கொலை! 4 பேர் கைது!
மகாராஷ்டிரத்தில் உள்ள கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து...
மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
லத்தூரின் அவுசா சாலையில் உள்ள கல்லூரியில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை 3 ஆம் ஆண்டு படிக்கும் இருவேறு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக வெடித்த இந்த மோதலில் இருதரப்பினரும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மோதலில் சிலர் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவ்வழியாகச் சென்ற விக்ரம் நாராயண் (வயது 20) எனும் மாணவர் ஒருவரை மோதலில் ஈடுபட்டவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த அந்த மாணவர் பரிதாபமாகப் பலியானார்.
Advertisement
Advertisement
இத்துடன், தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 4 மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க வேண்டுமெனவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் லத்தூரின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அமித் தேஷ்முக் காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.
A student was stabbed to death in a clash at a college in Maharashtra's Latur district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.