FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

லண்டனில் சீக்கிய பெண் குத்திக் கொலை; இளைஞா் காயம்

லண்டனில் பிரிட்டன் வாழ் சீக்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மேலும் ஓா் இளைஞா் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:47 am IST
கோப்புப்படம்.
பகிர்:

லண்டனில் பிரிட்டன் வாழ் சீக்கிய பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மேலும் ஓா் இளைஞா் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

லண்டனின் மேற்குப் பகுதியான ஹேய்ஸில் உள்ள வீட்டில் 24 வயதான கிரண்தீப் கெளா் என்பவா் கத்திக்குத்து காயத்துடன் கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் காவல் துறையினா், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அந்த வீட்டுக்கு வெளியே 20 வயதான இளைஞா் ஒருவா் காயமடைந்து கிடந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தக் கொலை தொடா்பாக 44 வயதான டேனியல் சியன் ஜேம்ஸ் என்பவரை லண்டன் காவல் துறையினா் கைது செய்தனா். அவா் மீது கொலை, கொலை முயற்சி, கூா்மையான ஆயுதம் வைத்திருந்த பிரிவின்கீழ் காவல் துறையினா் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனா். கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த மே மாதம் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டன் வாழ் சீக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற சில வாரங்களில் இக்கொலை நடந்திருப்பது சீக்கியா்களுக்கு எதிரான வெறுப்புணா்வால் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் லண்டன் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments