அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!
இயற்பியல், கணிதப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது குறித்து...
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை (பி.எஸ்சி.) இயற்பியல், கணிதப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விகிதம் இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைந்துள்ளது.
20 அரசுக் கல்லூரிகளில் இந்த இரு பாடப்பிரிவுகளிலும் ஒரு மாணவர் கூட சேரவில்லை அல்லது ஒற்றை இலக்க எண்ணிக்கை அளவே சேர்க்கை நடந்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் பெரிய முன்னேற்றம் இல்லாததால், இது குறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சிலுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் விரிவான அறிக்கை அளித்துள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் நோக்கத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
Advertisement
Advertisement
ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையுடன் அடையாளம் காணப்பட்ட கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதகமண்டலம், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி,
வால்பாறை, அரியலூர், ஒரத்தநாடு, கன்னியாகுமரி, திட்டக்குடி, குமாரபாளையம், மணல்மேடு, முதுகுளத்தூர், தாளவாடி, அரவக்குறிச்சி, கூத்தாநல்லூர், தாராபுரம் மற்றும் எரியூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்;
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை ராஜதுரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, குடியாத்தம் திருமகள் மில்ஸ் அரசு கல்லூர, மற்றும் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பி.எஸ்சி. கணிதத்தில் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. பிஎஸ்சி இயற்பியலிலும் மோசமான எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் தரவுகளின்படி 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3577 இடங்கள் பிஎஸ்சி இயற்பியலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1900 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. பிற்பகல் ஷிப்ட் வகுப்பில் 18 கல்லூரிகள் இணைந்து 676 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 289 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இவை எல்லாம் ஆங்கிய மீடியம் இயற்பியல் பாடப்பிரிவின் நிலையாகும்.
இயற்பியல் பிரிவில் ஆங்கில மீடியத்தை விட தமிழ் மீடியத்தில் மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது. 46 அரசு கலைக் கல்லூரிகளில் 1,506 இடங்கள் உள்ளன. இவற்றில் 1100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிக்காத பட்சத்தில், போதிய வரவேற்பைப் பெறாத பாடப்பிரிவுகளை நீக்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக இயக்குநரக அதிகாரிக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Almost nil admissions for B.Sc. Physics and Mathematics in government colleges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.