முக்கியச் செய்திகள்

வேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி!

RKV

கடந்த புதன் அன்று, லக்னெளவிலிருந்து புறப்பட்டு டெல்லியில் தரையிறங்க வேண்டிய அல்லயன்ஸ் ஏர் ஃப்ளைட் விமானம் (ஏர் இந்தியாவுக்குச் சொந்தமானது)... பாதி வழியில் ராஜஸ்தானை நெருங்கியதும் அங்கிருந்த சங்கனேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது., அத்தோடு தனது வேலை நேரம் முடிந்து விட்டதால்.. இனி தன்னால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது, ‘பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின்’ ஆணையின் படி, ஒரு விமானி தனது வேலை நேரத்தையும் தாண்டி அதிகப்படியாக விமானத்தை இயக்க வேண்டியது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விமானிகளுக்கான பொது விதி. அதன்படி தான் இனி இந்த விமானத்தை இயக்க முடியாது. என்று கூறி விமானி, விமானத்தையும், அதனுள் டெல்லியில் தரையிறங்கக் காத்திருந்த பயணிகளையும் அம்போவென பாதியில் விட்டு விட்டு இறங்கிச் சென்றுள்ளார். புதனன்று ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம், வியாழன் வரையிலும் அங்கு தான் இருந்திருக்கிறது.

பைலட்டின் செயலால் நொந்து போன பயணிகள் சங்கனேர் விமான நிலைய இயக்குனர் ஜே.எஸ் பல்ஹாராவிடம் முறையிட்டதில், ‘வேலை நேரம் முடிந்து விட்டதால், விமானியால் மீண்டும் விமானத்தை இயக்க முடியாது, எனவே அவர் இறங்கிச் சென்று விட்டார்’ என்று அவர் தெரிவித்ததாக பிடிஐக்கு அளித்த செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

விமானியால் ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட பயணிகளில் சிலர் அன்றைய தினமே சாலை வழியாகப் பயணித்து டெல்லி சென்றைடைந்தனர், எஞ்சியோருக்கு ஜெய்ப்பூரில் தங்கும் வசதி செய்து தரப்பட்டு மறுநாள் வேறொரு விமானம் வழியாக அவர்கள் டெல்லியை சென்றடைந்தனர்.

வேலை நேரம் முடிந்த பின் தன்னால் விமானத்தை இயக்க முடியாது, என்று உறுதியைக் கடைபிடித்து பாதிப் பயணத்தில் பயணிகளை இறக்கி விட்டுச் சென்று விட்ட அந்த விமானியின் செயலுக்கு தற்போது பொதுமக்களிடையே பாராட்டுதலும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT