முக்கியச் செய்திகள்

மோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு!

RKV

ராப் பாடகி ஹார்ட் கெளரின் ட்விட்டர் கணக்கு நேற்று செவ்வாய் அன்று முடக்கப்பட்டது. அவர் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் அதைக் கண்டிக்கும் வகையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல். 

ஹார்ட் கெளர் இப்படி ஆளும் தரப்பைக் கேலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு  எச்சரிக்கைக்கு உள்ளானவரே! அவர்களை மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் தலைமை நிர்வாகியான மோகன் பகவத் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டவர் தான் இவர்.

இதன் காரணமாகத் தற்போது கெளர் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரலாற்றில் மகாத்மா காந்தி, மகாவீரர் போன்ற தலைவர்கள் பிராமணர்களின் வர்ணாசிரம முறையை எதிர்த்துப் போராடி தேசத் தலைவர்கள் ஆனார்கள், அந்த வகையில் பார்த்தால் நீங்களொன்றும் தேசப்பற்று கொண்டவரெல்லாம் இல்லை’ என்று மோகன் பகவத்தின் புகைப்படத்துடன் நக்கலாகப் பதிவிட்டு ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

அதுமட்டுமல்ல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் அடிப்படையில் ஹார்ட் கெளர் மீது பலவேறு பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹார்ட் கெளர், ஓகே ஜானு, அக்லி ஒளர் பக்லி மற்றும் பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT