முக்கியச் செய்திகள்

செல்போனை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் மாணவர்கள்? கற்றலுக்காக 10%, மற்றவர்கள்?

DIN

செல்போனை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால், வகுப்பறை கல்விக்கு பதிலாக ஆன்லைன் கல்வி முறை செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், செல்போன்களின் பயன்பாடு மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.

தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு முடிவுகளின்படி,

இந்த ஆய்வானது 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 3,491 மாணவர்கள்(50.9 சதவீத ஆண் குழந்தை, 49.1 பெண் குழந்தை), 1,534 பெற்றோர்கள் மற்றும் 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் இந்த ஆய்வானது எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 10 முதல் 17 வயது வரையிலான மாணவர்களிடம் அதிகளவிலான கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14 மற்றும் 15 வயதுடைய தலா 500-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை 62.6 சதவீத மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் செல்போன் மூலம் பங்கேற்கிறார்கள். மேலும், 8 முதல் 18 வயதுடைய 30.2 சதவீத மாணவர்களிடம் சொந்த ஸ்மார்ட்போன், 19 சதவீதம் பேர் மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

மேலும், 10.10 சதவீத மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிப்பதும், மீதமுள்ளவர்களில் 52.90 சதவீதம் பேர் வாட்ஸ்ஆப், முகநூல் உபயோகிக்கவும், 31.90 சதவீத மாணவர்கள் விளையாடுவதற்கும், 44.10 மாணவர்கள் பாட்டு கேட்பதற்கும், 3.50 சதவீத மாணவர்கள் வீடியோ பார்ப்பதற்கும் உபயோகிப்பது தெரியவந்துள்ளது.

இதில், 42.90 சதவீத மாணவர்களிடம் சமூக ஊடகங்களில் கணக்கு உள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகவுள்ளது. அதில் 36.8 சதவீத மாணவர்களுக்கு முகநூலிலும், 45.50 சதவீத மாணவர்களுக்கு இன்ஸ்டாகிராமிலும் கணக்கு உள்ளது.

10 வயது மாணவர்களுக்கு 37.8 சதவீத பேர் முகநூலில், 24.3 சதவீத பேர் இன்ஸ்டாகிராமில்  கணக்கு வைத்துள்ளனர். 

மேலும், செல்போன் பயன்பாட்டு மூலம் 37.15 சதவீத மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT