சிறப்புச் செய்திகள்

சாலையோரத்தில் வண்ணம் தீட்டி பொம்மை விற்கும் ராஜஸ்தான் பெண்கள்!

பெரியார் மன்னன்


வாழப்பாடி: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து உடையாப்பட்டி வரை சாலையோரத்தில் முகாமிட்டு கடைவிரித்துள்ள ராஜஸ்தான் மாநில பெண்கள், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர். காண்போரை கவரும் விதத்தில் காணப்படும் விவசாயிகளின் வாகனமான டிராக்டர் பொம்மைகள் நுாற்றுக்கணக்கில் அமோகமாக விற்பனையானது.

கரோனா பெருந்தொற்று முதல் அலை பரவல் தருணத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், ராஜஸ்தான், பிகார், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இரு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு, பிற மாவட்ட தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள் கடந்த சில தினங்களாக குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தோடு முகாமிட்டுள்ளனர். 

டிராக்டர் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பாரம்பரிய உடையணிந்த ராஜஸ்தான் பெண்.

வாகனத்திலேயே வாழ்க்கை நடத்தும் இந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ராஜஸ்தான் மாநில பாரம்பரிய உடையணிந்தபடி, நெகிழி, மற்றும் மண் இரும்பு கலவையால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கிலுகிலுப்பை, டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகளை சாலையோரத்தில் கடைவிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இப்பெண்கள், கைகளால் வண்ணம் தீட்டி விவசாயிகளின் வாகனமாக டிராக்டர் பொம்மைகளை, பல்வேறு அளவுகளில் வரிசையாக அழகுற அடுக்கி வைத்து காட்சிப்படுத்தியுள்ளதை கண்டு, சாலையில் சொல்லும் வழிப்போக்கர்கள், ரூ.200 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் சுமித்ரா கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று பொது முடக்க தளர்வுக்கு பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பொம்மை வியாபாரத்திற்காக தமிழகத்திற்கு வந்துள்ளோம். 

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில், கைகளால் வண்ணம் தீட்டிய டிராக்டர் பொம்மைகள் அமோகமாக விற்பனையாகிறது. விவசாயிகளின் வாகனமான டிராக்டர் பொம்மைகளை இப்பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதால் கணிசான வருவாய் கிடைக்கிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT