அறிவிப்புத் தகடுகள் அகற்றப்பட்ட பின் | அகற்றப்படுவதற்கு முன்  
சிறப்புச் செய்திகள்

உடனடிப் பலன்: அகற்றப்பட்டன ஆபத்தான அறிவிப்புத் தகடுகள்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆபத்தான வகையில்  வைக்கப்பட்டிருந்த அறிவிப்புத் தகடுகள், இதுபற்றிய செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அகற்றப்பட்டன.

ததாகத்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆபத்தான வகையில்  வைக்கப்பட்டிருந்த அறிவிப்புத் தகடுகள், இதுபற்றிய செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அகற்றப்பட்டன.

வழக்கமாக அறிவிப்புப் பலகைகள் ஆள் உயரத்துக்கு - குறைந்தபட்சம் 6  அல்லது 7 அடி - மேற்பட்டதாகவும் வட்ட வடிவிலும் இருக்கும். 

ஆனால், தொழிற்பேட்டை இரண்டாவது முதன்மைச் சாலையில்  வைக்கப்பட்டிருந்த இரும்புத் தகட்டாலான இந்தப் பலகைகள் ஐந்தடி உயரம்கூட இல்லாத நிலையில் பாதைக்கு நடுவில் நடப்பட்டிருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஆபத்தான இந்தத் தகடுகளால் நேரிடும் அவதி பற்றியும் ஆபத்து பற்றியும் தினமணி இணைய தளத்தில் நேற்று பிற்பகலில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, உடனடியாக, சில மணி நேரங்களிலேயே, ஆபத்தான இந்த அறிவிப்புத் தகடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இந்தத் அறிவிப்புத் தகடுகளை வியாழக்கிழமை மாலையிலேயே அடியோடு பறித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

அறிவிப்புத் தகடுகள் அகற்றப்பட்டது குறித்து, இந்தப் பகுதியில் வழக்கமாகச் சென்று வருவோரும் மக்களின் அவதியைக் கவனித்துக் கொண்டிருந்தோரும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

SCROLL FOR NEXT