மிகச் சிறந்த பரிசு ஆயுள் காப்பீடு 
சிறப்புச் செய்திகள்

சப்சே பகலே லைஃப் இன்சூரன்ஸ்: ஆயுள் காப்பீடு ஏன் இன்றியமையாததாகிறது?

DIN

ஒருவர் தன் குடும்பத்துக்கும் தனக்குமே தந்து கொள்ளக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஆயுள் காப்பீடு. நீங்கள் உங்கள் பணியில் தொடக்க நிலையில் இருந்தாலும், உங்கள் வாழ்வின் இலக்குகளுக்கான நிதியைச் சேமித்துக் கொண்டிருந்தாலும் அல்லது ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாலும் நிதி சார்ந்த முடிவுகளில் ஆயுள் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஆயுள் காப்பீடுதான் எல்லாவற்றையும் விட முதன்மையானது’ என்பது ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாகவே இருக்க வேண்டிய ஒன்று.

ஆனால் மொத்த மக்கள்தொகையில் மிகக் குறைவானோர் மட்டுமே காப்பீடு செய்து கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. அண்மையில் ஆயுள் காப்பீட்டு அவை 40 மாநகரங்களில் 25-55 வயதுக்குட்பட்ட 12,000 பேருக்கும் மேற்பட்டோரிடம் ஆயுள் காப்பீடு குறித்த இந்திய மக்களின் புரிதலை அறியும் பொருட்டு ஓர் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வில் கலந்து கொண்ட மொத்தப் பேரில் 71% ஆயுள் காப்பீடு பெற்றவர்களாக அல்லது ஒரு காப்பீட்டை வாங்கும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர்.

இந்தியக் குடும்பங்களில் வருவாய் ஈட்டுபவர்களின் உச்சக்கட்ட முதல் தேர்வாக ஆயுள் காப்பீட்டை முன்வைக்கும் “சப்சே பகலே லைஃப் இன்சூரன்ஸ்” எனும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடைய (LIC) புதிய மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தோடு இந்த ஆய்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இயக்கம் நாட்டின் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதையே பொது நோக்கமாகக் கொண்ட 24 இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.

உண்மையில், ஆயுள் காப்பீடு வாங்குவது அதிகமாகியிருப்பதை கோவிட்-19 பெருந்தொற்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும் 91% பேர் ஆயுள் காப்பீடு இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்தும் அதில் முதலீடு செய்ய 70% பேர் மட்டுமே ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இது தொடர்பாக இன்னும் முன்னேற்றம் வேண்டியிருக்கிறது.

அறிக்கையின்படி பின்வரும் சில முக்கியமான தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன:

  • இருக்கும் நிதித் திட்டங்களிலேயே ஆயுள் காப்பீடுதான் ஏறக்குறைய 96% அளவில் பரவலாக அறியப்பட்டுப் பரஸ்பர நிதி (mutual funds) (63%) அல்லது சரிவிகிதப் பங்குகள் (39%) போன்றவற்றோடு ஒப்பிடும்பொழுது பெரிதும் மக்களால் அறியப் பெற்ற நிதித் திட்டமாக இருக்கிறது என மேற்படி ஆய்வு கூறுகிறது.
     
  • நிதித் திட்டம் எனும் முறையில் ஆயுள் காப்பீட்டின் முக்கியம் குறித்து மேற்படி வயதுக்குட்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலினருக்கும் பரவலாகத் தெரிந்திருக்கிறது.
     
  • 36 வயதுக்குக் கீழே உள்ளவர்களை விட 36 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆயுள் காப்பீடு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
     
  • ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப் பேர் ஆயுள் காப்பீட்டைக் காப்பீட்டு முகவரிடமிருந்தும் 10-இல் மூன்று பேர் வங்கியிடமிருந்தும் பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
     
  • ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் (47%) ஆயுள் காப்பீடு பெற்றவர்களாகவோ ஆயுள் காப்பீடு பெற்ற குடும்ப உறுப்பினரைக் கொண்டவர்களாகவோ இருப்பதோடு அது பற்றி நிறையவே அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது.

ஆக இந்த ஆய்வின் மூலம் நாடெங்கும் அனைத்து வயதினரிடையேயும் ஆயுள் காப்பீடு குறித்து மிகுந்த விழிப்புணர்வும் அது முக்கியமான நிதித் திட்டம் என்கிற புரிதலும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஆயுள் காப்பீடு என்பது “எதிர்பாரா நிகழ்வுகளில் உறுதுணையாகவும் எதிர்காலத்துக்கான நிதிப் பாதுகாப்பாகவும் குடும்பத்தின் பொதுவான நிதி இலக்குகளை எட்ட உதவியாகவும்” இருப்பதாக ஆய்வில் கலந்து கொண்டவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வதற்கான சில முக்கியக் காரணங்கள் இதோ:

1. உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க:

திர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் அதற்கு ஆயத்தமாகி விட்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். அது குழந்தையின் கல்வியோ உங்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்போ, எதுவாக இருந்தாலும் நீங்கள் அருகில் இல்லாத சூழலிலும் உங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு இவை அனைத்தும் கிடைப்பதை ஆயுள் காப்பீடு உறுதி செய்கிறது.

2. நெடுங்கால இலக்குகளை எதிர்கொள்ள: 
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் செய்யும் முதலீ¦ட்டை நீங்கள் பல்வேறு வகைகளில் திரும்பப் பெறலாம். இவற்றின் மூலம் நீங்கள் சொத்து வாங்குவது, கடனைத் தீர்ப்பது, ஓய்வுக் காலத் திட்டத்தை வடிவமைப்பது என நெடுங்கால இலக்குகளை அடைய முடியும். சில சமயங்களில் அடக்கத் தொகை (coverage amount), முதலீட்டு ஒதுக்கீடுகள் போன்றவற்றில் உங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்களைச் செய்து கொள்ளக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

3. உங்கள் ஓய்வுக் கால நிதியைப் பெருக்க: 
வாழ்வின் எதிர்பார்ப்புகள் உயர்ந்து கொண்டே செல்வதால் பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை என்பது பெரும்பாலானோரின் முக்கிய கவனத்துக்கு உரியதாக இருக்கிறது. சரியான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து வருடாந்திரத் தொகை அல்லது ஓய்வுத் திட்டத்தின் மூலம் நிலையான மாதாந்திர வருவாயை நீங்கள் உறுதி செய்து கொள்ள முடியும்.

4. வரிச் சேமிப்பு ஆதாயங்கள் பெற:
காப்பீட்டுத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் செலுத்த வேண்டிய வரியில் மிச்சப்படுத்தி நீங்கள் உங்கள் வருவாயை உயர்த்திக் கொள்ள முடியும். நீங்கள் செலுத்தும் தவணைக் கட்டணத்துக்கு (premium) வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80C-இன் கீழ் அதிகபட்சம் ரூ.1.5 இலட்சம் வரையில் வரி ஆதாயம் உண்டு. அதே போல் பிரிவு 10(D)-இன் கீழ் இறப்பு / முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

5. சேமிப்புக்காக:
ஆயுள் காப்பீட்டால் கிடைக்கும் வரி ஆதாயமே முதலில் ஒரு காப்பீட்டை நீங்கள் வாங்க ஊக்குவிக்கும் என்றாலும் பின்னர் அது ஒரு சேமிப்புக் கருவியாகவும் செயல்படுவதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் அந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். அல்லது அவசரக் காலத் தேவை ஏதும் ஏற்பட்டால் ஒரு பகுதித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
    
“ஆயுள் காப்பீட்டை இந்தியக் குடும்பங்களில் வருவாய் ஈட்டுபவர்களின் உச்சக்கட்ட முதல் தேர்வாக மாற்றிப் பாதுகாப்பும் ஆரோக்கியமுமான எதிர்காலத்தை அன்னாருடைய குடும்பத்துக்கு உறுதி செய்வதே எங்கள் நோக்கம். அக்கறையும் கடமையும் இருவேறல்ல என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்த மனப்பாங்கைப் பாதுகாக்கவும் இந்திய மக்களைக் கல்வியறிவு பெறச் செய்யவும் நாங்கள் விரும்புவதால்தான் சிறப்பான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம்” என்கிறார் ஆயுள் காப்பீட்டு அவையின் பொதுச் செயலாளர் S.N.பட்டாச்சார்யா அவர்கள்.
    
எவ்வளவு தொகைக்கான ஆயுள் காப்பீடு உங்களுக்குத் தேவைப்படும் என்பது உங்களைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை, அவர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் வாழ்க்கைமுறை, உங்கள் குழந்தையின் கல்விக்கான உங்கள் தேவை எனப் பல்வேறு காரணிகளையும் கூடவே உங்கள் முதலீட்டுத் தகுதியையும் பொறுத்தது. உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுக்க நீங்கள் ஒரு காப்பீட்டு முகவரையோ நிதி ஆலோசகரையோ அணுகலாம்.
    
எல்லாவற்றுக்கும் மேலாக ஆயுள் காப்பீடு என்பது உங்கள் குடும்பத்தின் தேவைகள் பொறுப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்கிற மன அமைதியை வழங்குகிறது.

ஆயுள் காப்பீடு பற்றி மேலும் அறிந்துகொள்ள.. sabsepehlelifeins.com இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT