கோப்புப்படம் 
சிறப்புச் செய்திகள்

அதிகரிக்கும் மோசடி: ஆதார் பயோ-மெட்ரிக்கை லாக் செய்துவிட்டீர்களா?

புதுப்புது மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மறுபக்கம் ஆதார் தகவல்கள் கசிகின்றன என்ற தகவல்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

DIN


புதுப்புது மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மறுபக்கம் ஆதார் தகவல்கள் கசிகின்றன என்ற தகவல்களும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில், ஆதார் தகவல் மற்றும் வங்கிப் பெயர் மட்டும் வைத்துக்கொண்டு மோசடி நடப்பதாகவும், அந்த மோசடிக்கு ஓடிபி எதுவும் தேவையில்லை என்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு, ஆதார் எண்ணுக்கு உரியவர்களின் கைரேகை மட்டும் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாம் எங்கெல்லாம் கைரேகையை பதிவு செய்கிறோமோ அங்கிருந்து ஆதார் எண் மற்றும் கைரேகையை சட்டவிரோதமாகத் திருடும் கும்பல், நமது வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணத்தைத் திருட முடியும் என்றும் எனவே ஆதார் பயனாளர்கள், தங்களது பயே-மெட்ரிக் தகவல்களை லாக் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி?

ஒவ்வொருவரும் நமது ஆதார் பயோ-மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். எப்போது நமக்கு பயோ-மெட்ரிக் தகவல் தேவைப்படுமோ அப்போது மட்டும் இந்த லாக்கை ரிலீஸ் செய்து கொள்ளலாம்.

லாக் செய்யும் முறை

  • யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். அல்லது எம்ஆதார் செயலியைப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் ஆதார் எண்ணுக்குள் நுழையுங்கள்.
  • அதில் மெனு என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில், பயோ மெட்ரிக் செட்டிங்க்ஸ் செல்லவும்.
  • எனாபிள் பயோமெட்ரிக் லாக் சேவைக்கு அருகில் உள்ள பெட்டிக்குள் டிக் மார்க் வைக்கவும்.
  • பிறகு ஒகே என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் செல்லிடபேசிக்கு ஓடிபி வரும்.
  • அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்ததும், உங்களது பயோ மெட்ரிக் தகவல்கள் லாக் செய்யப்பட்டுவிடும்.


​ஒருவேளை, உங்களுக்கு ஏதேனும் பரிவர்த்தனைகள் தேவைப்பட்டால் அப்போதுமட்டும் இதனை அன்லாக் செய்துவிட்டு, பிறகு வேலை முடிந்ததும் லாக் செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... எம பயம், செய்த பாவம் நீங்கும் திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர்!

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!

சொந்த மண்ணில் 3,211 நாள்களுக்குப் பிறகு சதம்: கே.எல்.ராகுல் புதிய சாதனை!

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT