முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 5 பேர்: மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர்

மதுராந்தகம் அருகே பூதூர் பகுதி பாலாற்று வெள்ளத்தில் ஒரு மூதாட்டி உள்பட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையிர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

மதுராந்தகம் அருகே பூதூர் பகுதி பாலாற்று வெள்ளத்தில் ஒரு மூதாட்டி உள்பட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையிர் ஈடுபட்டுள்ளனர்.

மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, இன்று பகல் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பாலாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த 4 இளைஞர்கள் வெள்ளத்தில் குதித்துச் சென்று மூதாட்டியைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களும் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர்.

இத் தகவல் கிடைத்ததும் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாலாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நான்கு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →