பாலியல் தொழில் ஈடுபடுத்த 7-ம் வகுப்பு மாணவியைக் கடத்திய பெண்ணிற்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக கடத்திச் சென்ற பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
தற்போதைய செய்திகள்பாலியல் தொழில் ஈடுபடுத்த 7-ம் வகுப்பு மாணவியைக் கடத்திய பெண்ணிற்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக கடத்திச் சென்ற பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக கடத்திச் சென்ற பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜன் மனைவி லட்சுமி (27). இவர் மீது பாலியல் தொடர்பான பல வழக்குகள் மற்றும் கஞ்சா விற்றது தொடர்பான பல்வேறு வழக்குகள் உண்டு. இவர் வத்திராயிருப்பு நெண்டியம்மன் கோவிலில் வந்து குடியிருந்து வந்தார்.
இதே இடத்தில் குடியிருந்து வருபவர் முருகன் (43). இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களின் மகள் முத்துமாரி (12). இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 13.2.11-ம் தேதி மாலை முத்துமாரி வீட்டில் தாய் சத்தம் போட்டதால் கோபித்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது லட்சுமி, முத்துமாரியை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி, அவரிடம் இங்கிருந்தால் உன்னை உன் அம்மா சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாள். நீ என்னுடன் வா. உன்னை நல்ல வேலைக்குச் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி, பேருந்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கூட்டி வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு கூட்டிச் சென்று, 14.2.11-ம் தேதி கோவில் மண்டபத்தில் தங்க வைத்து, தான் உடனே வந்து விடுவதாகக் கூறிச் சென்றவர் திரும்ப வரவில்லையாம்.
தன்னை தவறான செயலுக்கு கடத்தி வந்திருப்பதை அறிந்து அங்கிருந்த முத்துமாரி தப்பி, அங்குள்ள கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார். அங்கிருந்து முத்துமாரியின் பெற்றோர் அவரை 25.10.11-ம் தேதி அழைத்து வந்துள்ளார்கள். வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் தந்தை கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளம் பெண் முத்துமாரியை கடத்திச் சென்றதாக லட்சுமி மீது நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி என்.ராஜலட்சுமி, லட்சுமிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என முடிவு செய்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். தண்டனைத் தொகையை செலுத்தவில்லையென்றால் அதற்கான ஓராண்டு சிறைத் தண்டனையை தனிய அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.