முகப்பு
பெரும்பத்து பேருந்து நிறுத்தம்.
தமிழ்நாடு

நான்குனேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

நான்குனேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

நான்குனேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

நான்குனேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 3 மார்ச், 2026 at 7:28 AM
பெரும்பத்து பேருந்து நிறுத்தம்.
பகிர்:

நான்குனேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே சாலையில் நடந்து சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் வடமாநில தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

நான்குனேரி காவல் சரகம், பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் பைக்குகளில் கும்பலாக வந்த 9 பேர், அரிவாளால் அங்கு நின்ற பொதுமக்களையும், தப்பி ஓட முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டினராம்.

அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான்(42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா்(45) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லையில் முகாமிட்டு, டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

summary

Five special teams have been formed in connection with the Nanguneri murder incident and six people are being investigated.

முழு கட்டுரையைப் படிக்க →