மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாறாது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு காவிரியிருந்து தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தினையொட்டி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, கர்நாடக அரசு காவிரியிலிருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், கன்னட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றன. மக்களின் மன நிலையை மாநில அரசு உணர்ந்துள்ளது. கர்நாடகத்தின் சூழ்நிலையை தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் விவசாயிகளின் முதல்போக பயிறுக்கே தண்ணீர் விட முடியாத போது, தமிழகத்தில் சம்பா பயிறுக்கு தண்ணீர் கேட்பது சரியல்ல. காவிரியிலிருந்து தண்ணீர் பங்கீடு தொடர்பான சட்டப்போராட்டத்தில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். காவிரி விவகாரத்தில் முன்பு பங்காரப்பா எடுத்த அவசர சட்ட முடிவை, தற்போதைய அரசு எடுக்க முடியாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.