பாண்டெக்ஸ் நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
பாண்டெக்ஸ் நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்து சிஐடியு சார்பில் வியாழக்கிழமை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாண்டெக்ஸ் நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்து சிஐடியு சார்பில் வியாழக்கிழமை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெசவாளர்களுக்கு மழை நிவாரணம் ரூ.3000 உயர்த்தி தர வேண்டும், ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்தை அரசே முழுமையாக தர வேண்டும், பாண்டெக்ஸ் பிரதம நெசவாளர் சங்கங்களுக்கு நிதி வழங்கி அவற்றை பாதுகாக்க வேண்டும்.
பாண்டெக்ஸ் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.1.5 கோடி செலுத்த வேண்டும், வங்கிக்கடன் ரூ.20 கோடியை ரத்து செய்ய வேண்டும், பணிநிறைவு பெற்ற ஊழியர்களுக்கு ஈட்டியவிடுப்பு ரொக்கம் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், அரசுத் துணிகளுக்கான உத்தரவுகளை குறித்த நேரத்தில் வழங்கி உற்பத்தி செய்யவும், பிரதம சங்கங்களுக்கு தடையின்றி வேலைவாய்ப்பு தர வேண்டும்.
பாண்டெக்ஸ் நிறுவனத்துக்கு நிரந்தர மேலாண்மை இயக்குநரை நியமிக்க வேண்டும், நிலுவையில் உளள ஊதிய முரண்பாடு, தொகுப்பூதிய ஊழியர் பணிநிரந்தரம், போன்றவற்றை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் கே.செல்வராஜ் வரவேற்றார். சிஐடியு துணைச் செயலர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். கெüரவத் தலைவர் டி.முருகன் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர் கே.மகாராஜா நன்றி கூறினார். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.