தற்போதைய செய்திகள்

மண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட சலுவாலியா கட்சியினரை போலீசார் கைது 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. மண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட சலுவாலியா கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

DIN

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. மண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட சலுவாலியா கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. இரண்டு நாட்களாக சற்று அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் கன்னட சலுவாலியா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கர்நாடகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, இன்று காலை 6 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது. கன்னட அமைப்பினர் ஆங்காங்கே ரயில்களை மறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மண்டியாவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவாலிய கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

SCROLL FOR NEXT