காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர் சங்கத் தலைவர் நந்த குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் தமிழர்களின் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. லாரி டிரைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும், நாளை நடைபெறவேண்டிய காலாண்டு பாடத் தேர்வுகள் சனிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.