முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு ஆணை

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியது. 

Updated On : 19 செப்டம்பர், 2016 at 5:12 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீர் தொடர்பாக விவாதிக்க காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியது. 

தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகள் இரு தினங்களுக்கு முன்பு மேற்பார்வைக் குழு தலைவர் அலுவலகத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில் நீர்ப் பங்கீடு பற்றி முடிவு எடுத்து அதன் அறிக்கையை மேற்பார்வைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில் இன்று தில்லியில் நடந்த காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டதில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு மேலும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.