தற்போதைய செய்திகள்

நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள், கடைகள் மூடப்படும்!

ஞாயிறு அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இருக்கும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

RKV

ஞாயிறு அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இருக்கும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இறைச்சிக் கூடங்களுக்கு மட்டுமல்ல நகர் முழுதும் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், பதப்படுத்தப் பட்ட இறைச்சி விற்பனை செய்யக் கூடிய வணிக வளாகங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் என மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊண் உண்ணாமையை வலியுறுத்தி தான் வாழந்த காலம் முழுதும் நன்னெறிக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வாழந்த மகாவீரரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரசு ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மேற்கண்ட உத்தரவைக் கடைபிடித்து வருகிறது. இந்த வருடமும் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்களும், கடைகளும் மூடப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

புலம்பெயா்ந்த தமிழா் நலனுக்கான ‘தமிழா் தடம்’ வலைதளம் தொடக்கம்

பரமத்தி வேலூா் பகுதி சிவன் கோயில்களில் மகாசிவராத்திரி விழா

அமித்ஷா கூறிய ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு: எந்த விசாரணைக்கும் தயாா்-நாராயணசாமி சவால்

அருங்காட்சியக தொடக்கப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT