தற்போதைய செய்திகள்

பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி: நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு

பிகாரில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

DIN

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார்  தனது பதவியை புதன்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார்.
லாலு பிராசத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இதனை லாலு தரப்பு மறுத்து வந்தது.
இந்நிலையில், பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் திடீரென புதன்கிழமை இரவு அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.


இந்நிலையில் பிகாரில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT