முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியப் புலி, சீன டிராகனை விழுங்கி விட்டது!

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா, சீனாவை விட பின் தங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வரை சீனா மகிழ்ச்சியில் இருந்தது. இதைப் பற்றி குறிப்பிடும் போது; இந்தியப் புலியை, சீனா டிராகன் விழுங்கி

Updated On : 22 ஜூலை, 2025 at 11:18 AM
பகிர்:

கடந்தாண்டுகளை விட பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா, சீனாவை விட பின் தங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வரை சீனா மகிழ்ச்சியில் இருந்தது. இதைப் பற்றி குறிப்பிடும் போது; இந்தியப் புலியை, சீனா டிராகன் விழுங்கி விட்டது என்பதாக சீனாவின் பொருளாதார வல்லுனர்கள் கூறி மகிழ்ந்தனர்.

ஆனால் உலக வங்கி வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 6.8 சதவிகித வளர்ச்சியுடன் சீனாவை முந்தி விட்டது. இதே விகிதத்தில் இந்தியப் பொருளாதாரம் நீடித்து வளர்ந்தால் 2017 ஆம் ஆண்டில் அதன் வளரும் பொருளாதார விகிதம் 7.2 % ஆகவும், 2018 ல் 7.5 % ஆகவும் தொடர்ந்து ஏற்றம் பெற்ற நிலையிலேயே நீடிக்கும் என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்போது இந்தியா சீனாவைப் பார்த்து ‘சீன டிராகனை இந்தியப் புலி விழுங்கி விட்டது’ என்று சொன்னாலும் தவறில்லை. உலக வங்கி தான் சாட்சிக்கு நிற்கிறதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.