முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு தொடரும் நிதியுதவி!

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பத்து கோடி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சிலர் நிதி கொடுத்தனர். நடிகர் விஷால் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தனியார் கல்வி நிறுவனமொன்று ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கியிருக்கிறது. 

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தமிழ் இருக்கை நன்கொடையாக 25 லட்சம் வழங்கியுள்ளார். 25 லட்சத்திற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் அவர் நேற்று வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் ஆறுமுகம் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.