தற்போதைய செய்திகள்

கமல் விடுத்த எச்சரிக்கை பலித்துவிட்டது!

DIN

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். தவறு நடந்தபின் அரசை விமரிசிக்காமல், இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வடசென்னை பகுதியில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதால் கன மழை பெய்தால் நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் என்றும் வடசென்னைக்கு ஆபத்து என்றும் நடிகர் கமல் கடந்த தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் வடசென்னை வியாசர்பாடியில் கனமழை பெய்ததால் ஜீவா சுரங்க பாதையில் முட்டளவுக்கு சாக்கடை நீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி வழியாகச் சென்ற பேருந்து மழை நீரில் சிக்கி பழுதாகி நின்று விட்டது. மேலும் வெள்ளநீரில் சென்ற இரு சக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று விட்டது. நீர்த் தேக்கம் சற்றும் குறையாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

அப்பகுதிகளில் மின்சாரமும் இல்லாததால் மோட்டார் வைத்து அந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்ற வழி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஒரே நாள் மழையில் வடசென்னைக்கு இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது. போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிலமை சீர் அடையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT