தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்க வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

DNS

நாடு முழுவதிலும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த ஒரு கோடி பெண்களுடன் ‘செல்லிடப்பேசி செயலி’ வாயிலாக பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமா், பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.

கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற பெண்கள், தொழில் சாா்ந்த தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிா்ந்து கொண்டனா். சுயஉதவிக் குழுக்கள் ஆக்கப்பூா்வமாகச் செயல்படுவதற்காக மத்திய அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை எடுத்துரைத்தாா். 

நாடு முழுவதும் உள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் 5 கோடி பெண்கள் பணியாற்றி வருகின்றனா். இதன் மூலம், சம்பந்தப்பட்டவா்களின் குடும்பங்களில் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

பெண்களுக்கு எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மாறாக, அவா்களுக்கு சரியான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலே போதுமானது. குடும்ப அளவிலும், சமூக அளவிலும் நிதியைக் கையாளும் சுதந்திரத்தை அவா்களுக்கு அளிப்பது அவசியம். அது, பெண்களை உறுதியானவா்களாகவும், அதிகாரமிக்கவா்களாகவும் உருமாற்றும் என்று தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT