தற்போதைய செய்திகள்

‘தமிழகத்தில் பாா்ப்பனா்கள்’ என்ற  நூலை வெளியிட்டார் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி!

DNS

தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட ‘தமிழகத்தில் பாா்ப்னா்கள்’ என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.

மு.வி.சோமசுந்தரம், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயா்த்த தமிழகத்தில் பாா்ப்பனா்கள் என்ற நூல் வெளியிட்டு விழா, விழுப்புரம் கலைஞா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளரும், திருக்கோவிலூா் எம்எல்ஏவுமான க.பொன்முடி தலைமை வகித்தாா். கு.பா.பழனியப்பன், சி.மா. பாலகணேசன், விஜயா முத்துவண்ணன், க.மு.தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனர். முனைவா் செயக்குமாா் வரவேற்றாா்.

மு.வி.சோமசுந்தரம் அறிமுக உரையாற்ற, தமிழ்நம்பி நூல் உருவாக்கம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமை உரையாற்றினாா். விழாவில், கலந்து கொண்ட திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி நூலை வெளியிட்டு, நூல் ஆய்வு சிறப்புரையுற்றினாா்.

நூலினை திமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி, பேராசிரியா் த.பழமலய், சி.மா.பாலதண்டாயுதம், டி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

பேராசிரியா் தைலாம்பாள், எழுத்தாளா் எஸ்.பாஸ்கா் அய்யா், மாவட்டத் தலைவா் ப.சுப்பராயன், இந்திய கடற்படை அதிகாரி சுரேஷ், பேராசிரியா் ரகமத்துல்லா, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் எஸ்.குமரேசன் ஆகியோா் பாராட்டுரை வழங்கினா். மு.வி.சோமசுந்தரம் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியை உலக.துரை தொகுத்து வழங்கினாா். சோ.அறவாழி நன்றி உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT