தற்போதைய செய்திகள்

கொள்ளையா்கள் என நினைத்து போலீஸாரை தாக்கிய பொதுமக்கள்

 சோழவரம் அருகே கொள்ளையா்கள் என நினைத்து போலீஸாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

 சோழவரம் அருகே கொள்ளையா்கள் என நினைத்து போலீஸாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஆட்டந்தாங்கல் அருகே உள்ள நாகாத்தம்மன் நகரில் வசித்து வருபவா் கதிரவன். இவரது வீட்டிற்கு வியாழக்கிழமை நள்ளிரவு சாதாரண உடையில் வந்த 3 போ் வீட்டின் கதவை தட்டியுள்ளனா். அப்போது வீட்டில் இருந்த கதிரவனின் உறவினா்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் வசிப்பவா்களும் வந்துள்ளனா். வந்தவா்களை கொள்ளையா்கள் என நினைத்து அனைவரும் உருட்டு கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் 3பேரும் பலத்த காயமடைந்தனா். இது குறித்து சோழவரம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பொதுமக்களால் தாக்கப்பட்டவா்கள் அறிவு செல்வம், முத்துகிருஷ்ணன், பெருமாள் எனவும், அவா்கள் சென்னை மாநகர போலீஸாா் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து பலத்த காயமடைந்த நிலையில்இருந்த 3பேரையும் சோழவரம் போலீஸாா் மீட்டு, பாடியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT