தற்போதைய செய்திகள்

இந்து தெய்வங்களை சாத்தான்கள் எனக்கூறி பரபரப்புக் கிளப்பிய கிறிஸ்தவப் பிரசங்கி! 

பட்டுப்புடவை, பட்டு வேஷ்டியை எரித்து யாகம் பண்ணுகிறார்கள். யாகம் பண்ணி அவர்களுடைய காலில் விழுந்து தான் வணங்குகிறார்கள். ரூட் என்னவென்று பார்த்தால் மனுஷ வணக்கம் தான்.

RKV

சகோதரர் மோகன் லாஸரஸ் என்ற பெயரில் கிறிஸ்தவமத போதகராகவும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளராகவும் செயல்படும் தூத்துக்குடி நாலுமாவடியைச் சேர்ந்த மோகன் லாஸரஸ் தனது சமீபத்திய பிரசங்கம் ஒன்றில் இந்துக் கடவுள்களை சாத்தான் என விமர்சித்திருப்பது இந்துக்களிடையே கடும் கண்டன உணர்வைத் தட்டி எழுப்பியுள்ளது. 

மோகன் லாஸரஸின் பிரசங்க காணொளி... 

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டைப்போல சாத்தான்களின் அரண்கள் கிடையாது. அறிந்து கொள்ள வேண்டும், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் பெரிய பெரிய கோயில்கள், சாத்தான்களின் அரண்கள் கிடையாது. வட இந்தியாவுக்குச் சென்றீர்கள் என்றால் சில நகரங்களில் பிர்லா மந்திர் என்று இருக்கும். அது ஒன்று தான் பெரிதாக இருக்கும். கம்பெனிக்காரர்கள் கட்டியது. அது அவர்களின் புகழைப் பரப்பக் கட்டியது. மற்றபடி நீங்கள் அமிர்தசரஸ் சென்றால் பொற்கோயில் காணலாம். அந்த மாதிரி சில ஏரியாக்கள் தான் வட இந்தியாவில் பெரிய கோயில்கள் இருக்கும். தமிழ்நாட்டு அளவுக்கு இவ்வளவு பெரிய கோபுரங்கள், கோயில்கள் வேறு எந்த மாநிலங்களிலும் கிடையாது. ஏன் தமிழ்நாட்டை இவ்வளவு சாத்தான் அரண் அமைத்து குறி வைத்து ஸ்டராங் பண்ணியிருக்கிறான்? இதில் தான் எனக்கு தேவன் நிறைய காரியத்தை விளங்கப் பண்ணினார். இங்கே எவ்வளவு இடங்களில் சாத்தான் தன்னுடைய எல்லைகளை ஸ்திரப்படுத்தி இருக்கிறான் என்றெல்லாம் என்னால் பார்க்க முடிந்தது. கும்பகோணம் போனால் நாம் கிரகிக்க முடியாத அளவுக்கு சாத்தான் அத்தனை கோயில் அத்தனை இடங்களில் வேரூன்றியிருக்கிறான். நேற்று காஞ்சிபுரம் போனோம். அங்கே சங்கர மடத்துக்குள் செல்வதற்கு ஆண்டவர் எனக்குப் பலம் கொடுத்தார். நான் போனேன்... உள்ளே போனேன். அங்கே நேற்று இருவர் இருந்தனர். அங்கே பார்த்தீர்கள் என்றால் அவர்கள் பூஜை செய்து யாகம் செய்கிறார்கள். பட்டுப்புடவை, பட்டு வேஷ்டியை எரித்து யாகம் பண்ணுகிறார்கள். யாகம் பண்ணி அவர்களுடைய காலில் விழுந்து தான் வணங்குகிறார்கள். ரூட் என்னவென்று பார்த்தால் மனுஷ வணக்கம் தான். வெளியில் சொல்வது தான் அந்தக் கோபுரம், அந்த சக்தி எல்லாம். ஆனால் மனுஷனைத்தான் எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுகிறார்கள். இது மாதிரியான ரகஷியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

SCROLL FOR NEXT