தற்போதைய செய்திகள்

கரோனா நோயாளிகளைக் கையாள்வதில் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு: கேஜரிவால்

DIN


கரோனா நோயாளிகளைக் கையாளும்போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுவோரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.  

தில்லியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய கேஜரிவால், கரோனா நோயாளிகளைக் கையாளும்போது நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைத் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் இந்தப் பயனைப் பெறுவார்கள் என்றார்.

தில்லியில் நோய்ப் பரவல் காரணமாக 71 தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள்  எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்த வீட்டுக்குக்கூட செல்ல வேண்டாம் என்றும் அரவிந்த் கேஜரிவால் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT