முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல் செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது ஈரான் ராணுவம்

ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை நிலைநிறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

தெஹரான்: ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை நிலைநிறுத்தியுள்ளது.

நூர் செயற்கைக்கோள் எனப்படும் ஈரானின் இந்த ராணுவ செயற்கைக்கோள், இரண்டடுக்கு காசெத் கலம் மூலம் ஏவப்பட்டு, 425 கி.மீ. தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக காவல்படை (ராணுவம்) தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் (இர்னா) தெரிவித்துள்ளது.

ஈரானைப் பொருத்தவரையில் விண்வெளியில் இது புதிய முன்னேற்றம் என்றும் இர்னா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்தச் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →