முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்பப் பிரச்னை: காவல் நிலையத்தில் சின்னத்திரை நடிகை புகார்

குடும்ப பிரச்சனையினை தீர்கக்கூறி, எடப்பாடி காவல் நிலையத்தில், நேற்று சின்னதிரை நடிகை புகார் அளித்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:


எடப்பாடி: குடும்பப் பிரச்னையினை தீர்க்கக் கோரி, எடப்பாடி காவல் நிலையத்தில், சின்னத்திரை நடிகை நேற்று (சனிக்கிழமை) புகார் அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிலா(32). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கணவர் ஈஸ்வரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஷிலா, நடிப்பு தொடர்பான நுணுக்கங்களை கற்க, மும்பைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த, கட்டிட கலைஞரான, சௌந்திர ராஜன் என்பவருடன் ஷிலாவிற்கு, முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வள்ளியூரில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து, ஷிலாவை சௌந்திர ராஜன் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்த சில ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த சௌந்திரராஜன் ஷிலாவைப் பிரிந்து, தனது சொந்த ஊரான எடப்பாடி பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் ஷிலா உடனான தொடர்பினை படிப்படியாக துண்டித்த சௌந்திரராஜனுக்கு, அவரது பெற்றோர் வேறு திருமணம் செய்து வைக்க உள்ளதாகத் தகவல் அறிந்த ஷிலா, நேற்று எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் சௌந்திரராஜன் வேறுபெண்னை திருமணம் செய்வதனை தடுத்து நிறுத்தி, தன்னுடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார்.

இது குறித்து சௌந்திரராஜனிடம் தொடர் விசாரனை மேற்கொண்டபோது, ஷிலா ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மேலும் ஷிலாவிற்கு முதற்கணவருடன் விவாகரத்து ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து எடப்பாடி காவல் துறையினர், இப்பிரச்னையினை இருவரும் சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தினை அணுகி தீர்வுகாணுமாறும் கூறி அனுப்பிவைத்தனர்.

ஷிலா தற்போது தொலைக்காட்சியில் வரும் பல்வேறு தொடர் நாடகங்களில், நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →