கேரளத்தில் கனமழை: வயநாடு, கோழிக்கூடு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
கேரளத்தில் வயநாடு மற்றும் கோழிக்கூடு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயநாடு: கேரளத்தில் வயநாடு மற்றும் கோழிக்கூடு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கடலோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளத்தில் வயநாடு, கோழிக்கூடு ஆகிய பகுதிகளில் இன்று மிக அதிக கனமழை பெய்யும். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாவட்டங்களுக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளம் மற்றும் மாஹே பகுதிகளில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.